search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக எம்எல்ஏக்கள்"

    கூவத்தூர் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், தங்கம் கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பாமக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கூவத்தூர் சொசுகு பங்களாவில் இருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ., சரவணன், நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.எல்.ஏ.க்களுக்கு, எடப்பாடி பழனிசாமி பணம், தங்கம் ஆகியவை கொடுப்பதாக கூறினார். எனவே, இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    மதுரை:

    மதுரை ஓட்டலில் முகாமிட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து கழக துணை பொதுச்செயலாளர் இன்று எங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து துணை பொதுச்செயலாளர் உரிய முடிவை அறிவிப்பார்.


    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தெரிவிக்கப்படும். அ.தி.மு.க.வில் உள்ள மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு எங்கள் பக்கம் வருவார்கள். சிலிப்பர் செல்களும் வர வேண்டிய நேரத்துக்கு வருவார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி எம்.எல்.ஏ.க்கள் பயன்பெறுவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

    சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பார்த்தேன்.

    அம்மாவை மறந்து விட்டு, பழனிசாமி ஏதோ பரம்பரையாக முதல்-அமைச்சராக இருப்பது போல புகழ்பாடுகிறார்கள். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் சொந்த நலனுக்காக அரசு பணம் வாரி இறைக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது தான் உண்மை.

    நிதியே இல்லை. 110-வது விதியின் கீழ் புதிதாக அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இது அவருக்கு தெரியும்.

    இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இருக்கிறவரை அறிவிப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செய்கிறார். வர இருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran
    ×